Latest Entries »

வாழ்க்கையின் இனிய நிகழ்வுகளை தொகுத்து தருவதே நினைவுகள். அந்த நினைவுகள் ஒவ்வொன்றும் காலம் தந்த பொக்கிஷங்கள். அந்த ஒவ்வொரு நொடியின் ஒரு இனிய தேடல் தான் இந்த ………….

“நினைவுகளின் தேடல்”

சிறு வயது நினைவுகள் என்றும் சிறியவையாக இருந்தாலும் அதன் மதிப்பு என்றும் தனி தான்..   3 வயது வரை புரியாமல் விளையாட்டாக செல்லும் வாழ்க்கை, அர்த்தம் பெற தொடங்கி விடுகிறது பள்ளிக்கு செல்ல தொடங்கியதும்!

சற்று விளையாட்டாக தொடங்கினாலும், ஒவ்வொன்றும் வாழ்க்கையின் பாடங்கள் தான் 5 வயது முதல் 12 வயது வரை நடக்கும் நிகழ்வுகள் சிறியதாக இருந்தாலும் நட்பையும், ஆசிரியர்களையும் மறக்க இயலாது.

நாமாக தேடிய முதல் உறவு(நட்பு), வாங்கிய முதல் அடி, குழந்தை தனமாக நாம் செய்த குறும்புகள் இவை எல்லாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அடையாளங்கள்.

டீன் ஏஜ் பருவம் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. வாழ்க்கையை நிர்ணயிக்கும் பொது தேர்வு, நமது அன்பினை சோதித்து பார்க்கும் ப‌ல நிகழ்வுகள், கனவுகளை நினைவாக்கும் சில தருணங்கள், என யுகிக்க முடியாத பல திருப்பங்கள்.. என ஒவ்வொன்றும் அழகான தருணங்களை தேடுவது தான் இந்த தேடலின் தேடல்.

-தேடல் தொடரும் ……………

தொலைந்து விட்ட கனவிலும் !! தொலையாத என் நினைவுகள் என்றும் உன்னை நினைவுப்படுத்தும் வலிகளோடு….

உன் பார்வை உணர்த்திய அன்பினை.. உன் வார்த்தைகள் உணர்த்த மறுத்தது ஏன் ????!!!!

கண்களில் தொடங்கி, இதயத்தில் உருவாகும் அன்பு முடிவது மட்டும் ஏனோ கண்ணீரில்…..

கனவுகள் நிஜமாகும் தருணத்தில் கலைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமையான தருணம்..

உன்னை விட்டு விலக நினைத்தாலும் காலம் என்றும் உன்னை சுற்றும் படியே செய்கிறது நினைவுகளாலும்

நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட .. நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம் … நிஜங்கள் நிலைப்பதில்லை.. நினைவுகள் அழிவதில்லை

விருப்பம் இருந்தும் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன் ..வெறுப்பதற்காக அல்ல … தவறுகளை நீ உணர வேண்டும் என்பதால் …

பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் அன்பு அதிகமாக இருக்கும்…!

உன்னால் பிறர் ஏற்படுத்திய காயங்களை விட….. இப்போது நீ ஏற்படுத்திய காயங்கள் இதயத்தில் வலிக்கிறது..!!